சிவகாசி உழவர் சந்தையில் மேயர் ஆய்வு

சிவகாசி உழவர்சந்தையில் மேயர் சங்கீதா இன்பம் ஆய்வு மேற்ெகாண்டார். அப்போது அவர் சிறப்பாக செயல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Update: 2022-09-06 19:55 GMT

சிவகாசி, 

சிவகாசி உழவர்சந்தையில் மேயர் சங்கீதா இன்பம் ஆய்வு மேற்ெகாண்டார். அப்போது அவர் சிறப்பாக செயல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

உழவர்சந்தை

சிவகாசி நகரின் மையப்பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் உழவர் சந்தை திறக்கப்பட்டது. தமிழ்நாட்டின் 101-வது உழவர்சந்தை என்ற பெருமை இதற்கு உண்டு. விவசாயிகள் வந்து செல்ல வசதியாக பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட்டு இந்த உழவர் சந்தை செயல்பட்டு வந்தது.

இந்தநிலையில் ஆட்சி மாற்றம் காரணமாக உழவர் சந்தை செயல்படாமல் போனது. பின்னர் மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் உழவர்சந்தை பழையப்படி செயல்படும் என்று விவசாயிகளும், பொதுமக்களும் எதிர்பார்த்தனர். ஆனால் பெயரளவுக்கு தான் செயல்பட்டது.

மேயர் ஆய்வு

இந்த நிலையில் உழவர் சந்தையை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என 'தினத்தந்தி'யில் செய்தி வெளியானது. இதையடுத்து சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன், மண்டல தலைவர் சூர்யாசந்திரன், மாநகராட்சி கவுன்சிலர் ராஜேஷ் ஆகியோர் நேற்று காலை சிவகாசி உழவர்சந்தைக்கு சென்று திடீர் ஆய்வு செய்தனர்.

அப்போது அங்கு பணியில் இருந்த அதிகாரிகளை உழவர் சந்தையை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். இதுகுறித்து மேயர் சங்கீதா இன்பம் கூறியதாவது:- சிவகாசி உழவர்சந்தை மற்ற உழவர் சந்தைகளைவிட பெருமை கொண்டது. இங்கு வாகனங்கள் நிறுத்தவும், பொது மக்கள் வந்து செல்லவும் போதிய இட வசதி உள்ளது. இந்த உழவர் சந்தை விரைவில் செயல்பாட்டுக்கு வரும். தேவையான அடிப்படைகள் வசதிகள் மாநகராட்சி மூலம் செய்து தரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்