மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு மேயர் சரவணன் பாராட்டு

10-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாநகராட்சி பள்ளி மாணவர்களை மேயர் சரவணன் பாராட்டினார்.

Update: 2023-05-20 18:45 GMT

நெல்லை மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாநகராட்சி பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.

மாநகராட்சி மகளிர் கல்லணை பள்ளி ஆசிபா 490 மதிப்பெண், இசக்கியம்மாள் 489 மதிப்பெண், தாமரைச்செல்வி 484 மதிப்பெண்களும், மீனாட்சிபுரம் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி சக்தி 450 மதிப்பெண், மீனா 448 மதிப்பெண்கள், நீல ஆனந்த ஜோதி 416 மதிப்பெண்களும், பாரதியார் மேல்நிலைப்பள்ளி சூர்யா 443 மதிப்பெண், கார்த்திகா செல்வி 413 மதிப்பெண், இந்துமதி 405 மதிப்பெண்களும், பேட்டை ராணி அண்ணா மகளிர் மேல்நிலைப்பள்ளி சல்மாசுஜிதா 463 மதிப்பெண், ஜோதி ஜெபனா 460 மதிப்பெண், ஆர்த்தி 458 மதிப்பெண்களும், காயிதே மில்லத் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி ஷட்டியுல்லா 459 மதிப்பெண், முகமது யூசூப் ரசூது 456 மதிப்பெண், அம்சில்லா 438 மதிப்பெண்களும், காமராஜர் நகர்மன்ற மேல்நிலைப்பள்ளி ஆனந்த செல்வன் மற்றும் சுதர்சன் 385 மதிப்பெண்களும், தர்சன் 380 மதிப்பெண், விக்னேஷ் 375 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அவர்களுக்கு மாநகராட்சி மேயர் சரவணன் சால்வை அணிவித்து கேடயம் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் மாநகராட்சி உதவி ஆணையாளர் தாணுமலைமூர்த்தி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்