சிறப்பாக செயல்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு விருது - மேயர் பிரியா வழங்கினார்

சென்னை மாநகராட்சியுடன் இணைந்து தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நடந்தது.

Update: 2022-09-03 16:10 GMT

சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடத்தில், மாநகராட்சியுடன் இணைந்து தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நடந்தது. இந்தநிகழ்ச்சிக்கு மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா தலைமை தாங்கினார்.

நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் கீழ் செயல்படும் தீவிர தூய்மை பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாமில் சிறப்பாக பணியாற்றிய தூய்மைப் பணியாளர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள், பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகளின் பிரதிநிதிகள் என மொத்தம் 130 பேருக்கு சான்றிதழ் மற்றும் விருதுகளை மேயர் பிரியா வழங்கினார்.

தொடர்ந்து அவர், சென்னை மாநகராட்சியின் சார்பில் திடக்கழிவுகளை சேகரிக்கும் பேட்டரியால் இயங்கும் வாகனங்களில் நாள்தோறும் ஒலிபரப்பப்பட உள்ள மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணர்வு பாடலை வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் துணைமேயர் மகேஷ் குமார், கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உள்பட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இவ்வாறு சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்