ரேஷன் கடை, அங்கன்வாடி மையத்தை நகரமன்ற தலைவர் ஆய்வு
ரேஷன் கடை, அங்கன்வாடி மையத்தை நரேஷன் கடை, அங்கன்வாடி மையத்தை நகரமன்ற தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.
சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட 17-வது வார்டு பகுதியில் புதிதாக திறக்கப்பட உள்ள ரேஷன் கடை, அங்கன்வாடி மையம், வார்டுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஆகியவை குறித்து நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி அசோகன் மற்றும் துணைத் தலைவர் பழனி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், ரேஷன் கடை விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும், அங்கன்வாடி மையத்துக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். மின்விசிறி பொருத்தப்படும். கரும்பலகை, கடிகாரம் அமைக்கப்படும், என்றனர். அதைத்தொடர்ந்து அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு அவர்கள் நோட்டுப்புத்தகங்களை வழங்கினர்.
இதையடுத்து நகரமன்ற தலைவர் வார்டில் உள்ள சாலை, கழிவுநீர் கால்வாய் மற்றும் மின்விளக்கு, குடிநீர் வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும் அப்பகுதி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் சரி செய்யப்படும், எனத் தெரிவித்தார்.
ஆய்வின்போது நகர மன்ற உறுப்பினர் அன்பரசு, தி.மு.க. வட்டச் செயலாளர் திருமால், ராஜேந்திரன், நரசிம்மன் சுந்தர், அனுராதா ஆகியோர் உடனிருந்தனர்.