கவுன்சிலர்கள், அதிகாரிகளுடன் மேயர் ஆலோசனை
தூத்துக்குடியில் கவுன்சிலர்கள், அதிகாரிகளுடன் மேயர் ஜெகன் ஆலோசனை நடத்தினார்.
தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மற்றும் வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் மண்டல அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் வார்டுகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் வார்டுகளில் புதிதாக அமைக்கப்பட உள்ள மின்விளக்குகளின் பட்டியல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் மண்டல தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.