நர்சிங் கல்லூரி மாணவி மாயம்
வேலூர் அருகே நர்சிங் கல்லூரி மாணவி மாயமானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
வேலூர் அருகே உள்ள மேல்மொணவூர் பகுதியை சேர்ந்தவர் 19 வயது மாணவி. இவர் வேலூர் கொணவட்டத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த மாதம் 30-ந் தேதி கல்லூரிக்கு சென்ற மாணவி அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் வேலூர் வடக்கு போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.