நர்சிங் கல்லூரி மாணவி மாயம்

நர்சிங் கல்லூரி மாணவி மாயம் ஆனார்.

Update: 2023-09-14 18:50 GMT

திருச்சி மாவட்டம், நாகைநல்லூரை சேர்ந்தவர் வைஷ்ணவி. இவரது மகள் விஜயராகினி (வயது 16). இவர் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்தநிலையில் சம்பவத்தன்று கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பயிற்சிக்கு செல்வதாக கூறி விட்டு வீட்டில் இருந்து வெளியே வந்தார். ஆனால் மாலை வெகுநேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து விஜயராகினியை அவரது பெற்றோர் உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில், கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து, மாயமான விஜயராகினியை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்