மே தின பொதுக்கூட்டம்

நெல்லையில் மே தின பொதுக்கூட்டம் நடந்தது.

Update: 2023-05-02 18:48 GMT

நெல்லை மாவட்ட அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் மே தின பொதுக்கூட்டம் நெல்லை சந்திப்பில் நடந்தது. அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பொன்னுச்சாமி தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் தச்சை கணேசராஜா, அமைப்புச் செயலாளர் ஏ.கே.சீனிவாசன், பேச்சாளர் லட்சுமணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு பேசினார்கள்.

கூட்டத்தில் அமைப்புச்செயலாளர் ஏ.கே.சீனிவாசன் பேசுகையில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் 12 மணி நேரம் வேலை என்ற சட்டத்தை கொண்டு வந்தார். மத்திய அரசு இந்த சட்டத்தை கொண்டு வந்தபோது தமிழ்நாட்டில் இந்த சட்டத்தை அமல்படுத்த விடமாட்டோம் என்று கூறினார். ஆனால் அவரே இந்த சட்டத்தை இயற்றியுள்ளார். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என்று கூறியதை தொடர்ந்து அந்த சட்டத்தை தற்போது திரும்பப் பெற்றுள்ளார். தொழிலாளர்களுக்கு விரோதமாக செயல்படக்கூடிய இந்த ஆட்சியை அகற்ற தொழிலாளர்கள் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்றார்.

மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா பேசுகையில், நெல்லை மாநகராட்சியில் மக்கள் நலப்பணிகள் எதுவும் நடைபெறவில்லை. நெல்லை சந்திப்பு பஸ்நிலையம் திறக்கப்படவில்லை. எனவே மக்கள் நலப்பணிகள் செய்யாத நெல்லை மாநகராட்சியை உடனே கலைக்க வேண்டும். இல்லையெனில் அ.தி.மு.க. சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றார்.

கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன், முன்னாள் துணை மேயர் ஜெகநாதன் என்ற கணேசன், எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் கல்லூர் வேலாயுதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்