மே தினவிழா பொதுக்கூட்டம்

அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தினவிழா பொதுக்கூட்டம் நடந்தது.

Update: 2023-05-01 19:46 GMT

கடலூர்:

கடலூர் வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் கடலூரில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே.ஆர்.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பகுதி செயலாளர்கள் வெங்கட்ராமன், மாதவன், கந்தன், ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் ஆறுமுகம், மாவட்ட அவைத்தலைவர் சேவல்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பகுதி செயலாளர் எம்.பாலகிருஷ்ணன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராமச்சந்திரன், ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு தொழிலாளர்களின் உரிமைகள் குறித்து சிறப்புரையாற்றினர்.

இதில் எம்.ஜி.ஆர். இளைஞரணி துணை செயலாளர் கார்த்திகேயன், கடலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் காசிநாதன், டி.என்.எஸ்.டி.சி. மண்டல செயலாளர் நவநீதகண்ணன், மாவட்ட துணை தலைவர் தங்க.ஆறுமுகம், கட்டுமான அமைப்பு செயலாளர் விஜயகுமார், பண்ருட்டி நகர செயலாளர் தாடி முருகன், அண்ணாகிராமம் ஒன்றிய செயலாளர் தமிழ்செல்வன், அண்ணாகிராமம் ஒன்றிய செயலாளர் நாகபூஷ்ணம், பண்ருட்டி ஒன்றிய செயலாளர் சிவா, மாவட்ட துணை செயலாளர் மணிமேகலை தஷ்ணா, பொதுக்குழு உறுப்பினர் ராமசாமி, மாவட்ட பிரதிநிதி தமிழ்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஜெயலலிதா பேரவை துணை தலைவர் மணிமாறன், அண்ணா தொழிற்சங்கம் சுந்தரராஜன் ஆகியோர் நன்றி கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்