மின்வாரிய அலுவலகம் முன்பு மே தின கொடியேற்று விழா
மின்வாரிய அலுவலகம் முன்பு மே தின கொடியேற்று விழா நடந்தது.
கீழ்பென்னாத்தூர்
மின்வாரிய அலுவலகம் முன்பு மே தின கொடியேற்று விழா நடந்தது.
கீழ்பென்னாத்தூர் மின்வாரிய அலுவலகம் முன்பு மே தின விழாகொண்டாடப்பட்டது.
விழாவிற்கு திருவண்ணாமலை கிழக்குக் கோட்ட சி.ஐ.டி.யு தலைவர் அருள்தாஸ் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் காங்கேயன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 137வது மே தின விழாவை முன்னிட்டு செங்கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
இதில் மின்வாரிய ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கோட்ட துணைசெயலாளர் பாவேந்தன் நன்றி கூறினார்.