ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மே தின விழா
கொள்ளிடத்தில் ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மே தின விழா நடந்தது
கொள்ளிடம்:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் வட்டார கல்வி அலுவலக வளாகத்தில் தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கொடி ஏற்று விழா நடந்தது. விழாவுக்கு வட்டார துணைத் தலைவர் ராஜராஜன் தலைமை தாங்கினார்.வட்டார செயலாளர் சங்கர் வரவேற்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர் கண்ணன், மாவட்ட மகளிரணி செயலாளர் கலைச்செல்வி, மாவட்ட மகளிரணி செயலாளர்கள் ராணி, ஜோதி முன்னிலை வகித்தனர்.மாநில துணைப்பொதுச் செயலாளர் கமலநாதன் கலந்து கொண்டு இயக்கக் கொடியினை ஏற்றி வைத்து மே தின சிறப்பு உரையை நிகழ்த்தினார். நிர்வாகிகள் சத்யா, முத்தமிழ்செல்வி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார பொருளாளர் ரவி நன்றி கூறினார்.