ஜூன் 23-ல் அதிகபட்ச மக்கள் மெட்ரோவில் பயணம் - சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தகவல்
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம்.;
சென்னை,
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், வெளி ஊரில் இருந்து வரும் பயணிகளுக்கும் மெட்ரோ இரயிலில் பயணிக்கும் போது ஒரு நம்பகமான பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது.
அதன் பயனாக சென்னை மெட்ரோ இரயில்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கிறது. இது பயணிகளின் நல்வரவேற்பை பெற்றுள்ளதாகவும், பயன்பாடும் அதிகரித்து வருவதையும் காட்டுகிறது.
இந்நிலையில், 23.06.2023 அன்று ஒரே நாளில் மட்டும் அதிகபட்சமாக 2,81,503 பயணிகள் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். இதில் அதிகபட்சமாக புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்தில் 23,745 பயணிகளும், திருமங்கலம் மெட்ரோ இரயில் நிலையத்தில் 14,935 பயணிகளும், கிண்டி மெட்ரோ இரயில் நிலையத்தில் 14,938 பயணிகளும் பயணம் செய்துள்ளனர்.
அந்த வகையில், ஜனவரி மாதத்தில் அதிகபட்சமாக 13.01.2023 அன்று 2,65,847 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் அதிகபட்சமாக 10.02.2023 அன்று 2,61,668 பயணிகளும், மார்ச் மாதத்தில் அதிகபட்சமாக 10.03.2023 அன்று 2,58,671 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் அதிகபட்சமாக 28.04.2023 அன்று 2,68,680 பயணிகளும், மே மாதத்தில் அதிகபட்சமாக 24.05.2023 அன்று 2,64,974 பயணிகளும் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மெட்ரோ இரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு மற்றும் பயண அட்டைகளை (Travel Card) பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 20% கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
மெட்ரோ இரயில்கள் மற்றும் மெட்ரோ இரயில் நிலையங்களை சுத்தமாவும், சுகாதாரமாகவும் பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.