நாமக்கல் மாவட்டத்தில் கடுமையான வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், நேற்று முன்தினம் இரவு சில இடங்களில் மழை பெய்தது. அதிகபட்சமாக சேந்தமங்கலம் பகுதியில் 34 மி.மீட்டர் மழைபதிவானது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழைஅளவு மி.மீட்டரில் வருமாறு:-
கொல்லிமலை - 33, எருமப்பட்டி-30, கலெக்டர் அலுவலகம்-10, மோகனூர்-10, மங்களபுரம்-9, குமாரபாளையம்-3, நாமக்கல்-2, பரமத்திவேலூர்-2, புதுச்சத்திரம்-1. மாவட்டத்தின் மொத்த மழைஅளவு 134 மி.மீட்டர் ஆகும்.