திருவையாறில் அதிகபட்சமாக 51 மி.மீ. பதிவானது

திருவையாறில் அதிகபட்சமாக 51 மி.மீ. பதிவானது

Update: 2022-06-16 19:51 GMT

தஞ்சை மாவட்டத்தில் கோடை மழை பெய்தது. திருவையாறில் அதிகபட்சமாக 51 மி.மீ. மழை பதிவானது.

கோடை மழை

தமிழகத்தில் கோடை காலம் முடிந்தும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தஞ்சை மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வருகிறது. இந்த வெயில் காரணமாக இரவிலும் அதன் தாக்கம் உள்ளது. மின்விசிறியில் இருந்து வரும் காற்று கூட அனல் காற்றாக வீசுகிறது. கோடை காலம் போல வெயில் கொளுத்தி வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டமும் குறைவாக காணப்படுகிறது.

தற்போது பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. அதன்படி தஞ்சை மாவட்டத்திலும் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. பகல் நேரத்தில் வெயில் கொளுத்துவதும், இரவு நேரங்களில் மழை பெய்வதுமாக இருந்து வருகிறது.

விவசாயிகள் மகிழ்ச்சி

அதன்படி நேற்று முன்தினம் இரவு தஞ்சை மாவட்டத்தில் மழை பெய்தது. திருவையாறு, அணைக்கரை, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று காலை முதல் மழை இன்றி வெயில் அதிகமாக காணப்பட்டது.

இந்த மழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் தற்போது குறுவை சாகுபடியில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மழை அளவு

தஞ்சை மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

திருவையாறு 51, அணைக்கரை 38, பேராவூரணி 26, கும்பகோணம் 21, அய்யம்பேட்டை 21, பாபநாசம் 19, தஞ்சை 19, வல்லம் 17, குருங்குளம் 12, பூதலூர் 11, திருக்காட்டுப்பள்ளி 3, கல்லணை 3, மஞ்சளாறு 2.

Tags:    

மேலும் செய்திகள்