தஞ்சையில் அதிகபட்சமாக 37 மி.மீ. மழை பதிவானது

தஞ்சையில் அதிகபட்சமாக 37 மி.மீ. மழை பதிவானது

Update: 2022-09-08 19:45 GMT

தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை பகுதியில் அதிக பட்சமாக 37 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. குடிசை வீடு இடிந்து சேதம் அடைந்தது.

பரவலாக மழை

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்திலும் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பகலில் வெயில் அடிப்பதும், இரவு நேரங்களில் மழை பெய்வதுமாக உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் மழை பெய்யத்தொடங்கியது. பின்னர் விட்டு, விட்டு மழை பெய்த வண்ணம் இருந்தது. தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. நேற்று காலை முதல் மழை பெய்யவில்லை. வெயில் காணப்பட்டது. பின்னர் மாலையில் சிறிது நேரம் மழை பெய்தது. தஞ்சை மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக குடிசை வீடு இடிந்து சேதம் ஆனது.

தஞ்சையில் அதிகம்

தஞ்சை மாவட்டத்தில் நேற்று காலை 7 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

தஞ்சை 37, குருங்குளம் 23, நெய்வாசல் தென்பாதி 20, வல்லம் 16, பூதலூர் 11, பாபநாசம் 3, திருவையாறு 2, கல்லணை 1.

Tags:    

மேலும் செய்திகள்