மாவடிபண்ணை முத்தாரம்மன் கோவில் கொடை விழாவில்பக்தர்கள் பால்குட ஊர்வலம்
மாவடிபண்ணை முத்தாரம்மன் கோவில் கொடை விழாவில் பக்தர்கள் பால்குட ஊர்வலம் நடந்தது.;
தென்திருப்பேரை:
மாவடிபண்ணை முத்தாரம்மன் கோவிலில் சிவன், சக்தி மற்றும் முத்தாரம்மன் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் அமர்ந்து அருள்பாலித்து வருகின்றனர். இக்கோவிலில் பிரசித்திபெற்ற ஆவணி கொடைவிழா கடந்த 5-ந்தேதி கால்நாட்டுடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும், ஆராதனைகளும் நடைபெற்றது. கடந்த 10-ந் தேதி காலையில் வில்லிசை நடந்தது. சிகர நிகழ்சியான நேற்று காலை 8 மணிக்கு ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து கோவிலில் பாலாபிஷேகமும், மதியம் சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. காலை, மதியம் மற்றும் இரவு அன்னதானம் நடைபெற்றது. இன்று(புதன்கிழமை) அம்மனுக்கு பொங்கலிடுதல் மற்றும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துள்ளனர்.