மதுரையில் இருந்து சென்று மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் நடத்தி வைத்தனர்: திருப்பரங்குன்றம் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம்- பக்தர்கள் பரவசம்; இன்று தேரோட்டம்

திருப்பரங்குன்றம் முருகப்பெருமான்-தெய்வானை திருக்கல்யாணம் நேற்று பக்தி கோஷங்கள் முழங்க விமரிசையாக நடந்தது. மதுரையில் இருந்து சென்று மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் நடத்தி வைத்தனர். இன்று தேரோட்டம் நடக்கிறது.

Update: 2023-04-08 21:12 GMT

திருப்பரங்குன்றம்.

திருப்பரங்குன்றம் முருகப்பெருமான்-தெய்வானை திருக்கல்யாணம் நேற்று பக்தி கோஷங்கள் முழங்க விமரிசையாக நடந்தது. மதுரையில் இருந்து சென்று மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் நடத்தி வைத்தனர். இன்று தேரோட்டம் நடக்கிறது.திருப்பரங்குன்றம் முருகப்பெருமான்-தெய்வானை திருக்கல்யாணம் நேற்று பக்தி கோஷங்கள் முழங்க விமரிசையாக நடந்தது. மதுரையில் இருந்து சென்று மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் நடத்தி வைத்தனர். இன்று தேரோட்டம் நடக்கிறது.திருப்பரங்குன்றம் முருகப்பெருமான்-தெய்வானை திருக்கல்யாணம் நேற்று பக்தி கோஷங்கள் முழங்க விமரிசையாக நடந்தது. மதுரையில் இருந்து சென்று மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் நடத்தி வைத்தனர். இன்று தேரோட்டம் நடக்கிறது.திருப்பரங்குன்றம் முருகப்பெருமான்-தெய்வானை திருக்கல்யாணம் நேற்று பக்தி கோஷங்கள் முழங்க விமரிசையாக நடந்தது. மதுரையில் இருந்து சென்று மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் நடத்தி வைத்தனர். இன்று தேரோட்டம் நடக்கிறது.

திருக்கல்யாணம்

முருகப்பெருமான் அருளாட்சி புரியும் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடாக மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் விளங்குகிறது. அங்கு ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா 15 நாட்கள் விமரிசையாக நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான விழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடந்தது.

விழாவின் முத்தாய்ப்பாக நேற்று சுப்பிரமணியசுவாமி-தெய்வானை திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.

இதையொட்டி நேற்று அதிகாலை 5 மணி அளவில் உற்சவர் சன்னதியில் சுப்பிரமணியசுவாமி-தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

சந்திப்பு நிகழ்ச்சி

மேளதாளங்கள் முழங்க உற்சவர் சன்னதியில் இருந்து தெய்வானையுடன் முருகப்பெருமான் புறப்பட்டு சன்னதிதெரு வழியாக பசுமலை மூலக்கரை அருகே உள்ள சந்திப்பு மண்டபத்துக்கு சென்றார்.

இதேவேளையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் தனித்தனி பல்லக்கில் புறப்பட்டு திருப்பரங்குன்றம் நோக்கி வந்தனர்.

காலை 7.55 மணிக்கு சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, முருகப்பெருமான் தனது தாய்-தந்தையான மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரரை வணங்கி வரவேற்றார். தாய்-தந்தையை வலம் வந்தார். இதுகண்கொள்ளா காட்சியாக இருந்தது. இத்தகைய நிகழ்ச்சி ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. பின்னர் அங்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. இதனைதொடர்ந்து அங்கிருந்து திருப்பரங்குன்றம் நோக்கி வந்தனர்.

வழி நெடுகிலுமாக ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த திருக்கண்களில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்த நிலையில் கோவிலுக்குள் லட்சுமி தீர்த்தம் செல்லும் வழியில் ஓடுக்கம்மண்டபத்தில் கண்ஊஞ்சல் நடந்தது.

கோவிலில் பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்த 6 கால் மண்டபத்தில் பகல் 11.45 மணிக்கு பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், 11.50 மணிக்கு மீனாட்சி அம்மனும் அடுத்தடுத்து எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தனர்.

திருக்கல்யாண வைபோகம்

மதியம் 12.மணிக்கு தெய்வானையுடன் முருகப்பெருமான் மணமேடையில் எழுந்தருளினார் மணமேடையில் அக்னி வளர்க்கப்பட்டு திருமண சம்பிராதயங்கள் மற்றும் சர்வ பூஜைகள் நடைபெற்றன.

தொடர்ந்து சுந்தரேசுவரர்-மீனாட்சி அம்மனின் அருள் பார்வையில் முருகப்பெருமான் தெய்வானைக்கு பட்டாடை மற்றும் பூமாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. வெண்பட்டு உடுத்தி முருகப்பெருமானும், பச்சை-மஞ்சள் பட்டு உடுத்தி தெய்வானையும் மணக்கோலத்தில் அருள்பாலித்தனர்.

முருகப்பெருமானின் பிரதிநிதியாக கோவில் 2-ம் ஸ்தானிகர் ரமேஷ் பட்டரும், தெய்வானை அம்பாளின் பிரதிநிதியாக சிவசுப்பிரமணிய பட்டரும் இருந்து பட்டாடை மற்றும் பூமாலையை மாற்றிக் கொண்டனர்.

12.45 மணிக்கு மங்கல வாத்தியங்கள் முழங்க முருகப்பெருமான்-தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. மங்கல நாண் தெய்வானைக்கு சூட்டப்பட்டது.

இந்த கண்கொள்ளாக்காட்சியை அங்கு திரளாக கூடி இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அட்சதை தூவி சுவாமியை வழிபட்டனர். அரோகரா கோஷங்கள் எழுப்பினர். பெண்கள் புதிய மங்கல நாண் அணிந்துகொண்டனர். இதையடுத்து நேற்று இரவு 16 கால் மண்டபம் அருகே பிரியாவிடை நிகழ்ச்சி நடைபெற்றது. பூப்பல்லக்கில் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளினார்.

இன்று தேரோட்டம்

திருமணத்தை நடத்தி வைத்து, அது சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்குப்பின் சுந்தரேசுவரரும்-மீனாட்சி அம்மனும் விடைபெற்று இருப்பிடத்துக்கு புறப்பட்டனர். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று 9-ந்தேதி (தேரோட்டம்) நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றன.

மதுரையில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழாவின்போது மீனாட்சி அம்மனுக்கு அவரது அண்ணனான கள்ளழகர் சீர்வரிசை கொண்டு வருவது போலவே முருகப்பெருமானின் 6-ம் படை வீடான பழமுதிர்சோலையில் இருந்து, முதல்படை வீடான திருப்பரங்குன்றம் கோவிலுக்கு திருக்கல்யாணத்தை முன்னிட்டு சீர்வரிசை கொண்டுவரப்பட்டன. இத்தகைய நடைமுறை கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்