பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற மாதர் சம்மேளன மாநாட்டில் தீர்மானம்
பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற வேண்டும் என மாதர் சம்மேளன மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் 15-வது மாவட்ட மாநாடு புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்றது. மாநாட்டை தொடங்கி வைத்து சங்கத்தின் மாநில துணை செயலாளரும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய குழு உறுப்பினருமான கண்ணகி பேசினார். மாநில செயலாளர் மஞ்சுளா சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ், அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்திட வேண்டும். சட்டமன்ற, நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை நிறைவேற்றிட வேண்டும். ஏழைகள் அதிகம் வாழும் மாவட்டமாக புதுக்கோட்டை மாவட்டத்தை நிதி ஆயோக் அறிவித்துள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் புதுக்கோட்டை மாவட்டத்திற்ெகன சிறப்பு திட்டங்களை அறிவித்து செயல்படுத்திட வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக பழைய பஸ் நிலையத்திலிருந்து அண்ணா சிலை வழியாக மண்டபம் வரை ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்திற்கு மாவட்ட செயலாளர் இந்திராணி தலைமை தாங்கினார். இதில் கட்சியை சேர்ந்த பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.