மாதர் சங்கத்தினர் கையெழுத்து இயக்கம்

ஜி.எஸ்.டி. வரி உயர்வை கண்டித்து தூத்துக்குடியில் மாதர் சங்கத்தினர் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.

Update: 2022-07-05 12:41 GMT

மத்திய அரசு கடந்த ஓராண்டில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலையை 70 சதவீதம் உயர்த்தி உள்ளது. காய்கறி, தானியங்கள், உணவு, எண்ணெய் விலை, பருப்பு விலை என அனைத்து அத்தியாவசிய பொருட்கள் விலையும் உயர்ந்து உள்ளது. இந்த நிலையில் பேனா, பென்சில், மருந்து, மாத்திரை உள்ளிட்ட பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசு அதிகரித்து இருக்கிறது.

இந்த வரி உயர்வை கண்டித்து, தூத்துக்குடி மாவட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் பழைய பஸ் நிலையத்தில் கையெழுத்து இயக்கம் நடந்தது. சங்க மாவட்ட செயலாளர் பூமயில், மாவட்ட துணை தலைவர் கலைச்செல்வி, மாவட்ட துணை செயலாளர் கமலம், புற‌நகர செயலாளர் கண்ணகி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்