பிளஸ்-1 அரசு பொதுத்தேர்வினை நீக்கம் செய்திட முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் வேண்டுகோள்

பிளஸ்-1 அரசு பொதுத்தேர்வினை நீக்கம் செய்திட முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Update: 2023-01-08 17:52 GMT

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் பெரம்பலூரில் மாநில தலைவர் மணிவாசகன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தமிழக அரசின் 7, 8-வது ஊதியக்குழுவின் குறைபாடுகளை களைய வேண்டும். அகவிலைப்படி நிலுவை தொகையினை வழங்கிட வேண்டும். ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்து பணப்பயன் பெற அனுமதி வேண்டும். கூடுதல் விடைத்தாள் திருத்தும் மையங்களை ஏற்படுத்திட வேண்டும். பிளஸ்-1 அரசு பொதுத்தேர்வினை நீக்கம் செய்திட வேண்டும். பிளஸ்-1, பிளஸ்-2 பயிலும் மாணவ-மாணவிகளுக்கு பாடத்திட்டத்தின் அளவை குறைத்திட வேண்டும். ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்றிட வேண்டும். ஆசிரியர்களை போக்சோ சட்டத்தில் உடனே கைது செய்வதை தவிர்த்து முறையே துறை ரீதியாக உரிய விசாரணை செய்த பின் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்