மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்: இன்று நடக்கிறது.

கரூர் மாவட்டத்தில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் 1,578 மையங்களில் இன்று நடக்கிறது.

Update: 2022-09-03 18:38 GMT

கொரோனா தடுப்பூசி முகாம்

கரூர் மாவட்டம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 35-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் 1,578 மையங்களில் நடைபெறுகிறது. கொரோனா தொற்று முற்றிலும் குறைந்து இருந்தது. தற்போது தினசரி தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் பொது சுகாதார துறையின் மூலம் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள தடுப்பூசி போடும் பணிகள் மற்றும் பரிசோதனை முகாம்கள் தற்போது நடத்தப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தில் 12-18 வயதில் உள்ளவர்களில் தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதனால் அவர்களுக்கு கொேரானா தொற்று அதிகம் பாதிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் அந்த வயது உடையவர்கள் முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசியை செலுத்தி கொள்ளலாம்.

பூஸ்டர் தடுப்பூசி

மேலும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி அரசு சுகாதார நிலையங்களில் 75-வது சுதந்திர தினத்தையொட்டி ஜூலை 15 முதல் செப்டம்பர் 30 வரை 75 நாட்களுக்கு இலவசமாக போட்டுக்கொள்ளலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது.மேலும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்திய தேதியில் இருந்து 9 மாத கால அவகாசத்தில் இருந்து, தற்போது 6 மாத கால அவகாசமாக குறைக்கப்பட்டுள்ளதால், இவர்களும் இம்முகாமை பயன்படுத்தி பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்

5,50,518 பேர்

கரூர் மாவட்டத்தில் 2-ம் தவணை தடுப்பூசி, பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கு தகுதியுடையவர்களாக 5,50,518 பேர் உள்ளனர். இவர்களும் இம்முகாமை பயன்படுத்தி கொள்ளலாம். இதுவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவர்கள், பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வேண்டிய 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தவறாமல் முகாமை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்