பாளையங்கோட்டை:
பாளையங்கோட்டையில் அஞ்சல்துறை பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் 49-வது பேரவை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தலைவர் கனகசபாபதி தலைமை தாங்கினார். துணை தலைவர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வருகிற 2023-ம் ஆண்டு பொன்விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும், அதில் முன்னாள் நிர்வாகிகளை அழைத்து கவுரவப்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் சங்கத்திற்கு சொந்தமான காலிமனையில் புதிதாக கட்டிடம் கட்டுவதற்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் இயக்குனர்கள் ஜேக்கப்ராஜ், கதிரேசன், அண்ணாமலை, ஹைருன்னிஷா பேகம் உள்பட உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.