தூக்குப்போட்டு கொத்தனார் தற்கொலை
திருவாரூர் அருகே தூக்குப்போட்டு கொத்தனார் தற்கொலை
திருவாரூர் அருகே வைப்பூர் பகுதியை சேர்ந்த ரவி மகன் வீரபாபு (வயது21). கொத்தனார். இவர் கடந்த சில நாட்களாக வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்கு பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. சம்பவத்தன்று அவருக்கு மீண்டும் வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த வீரபாபு வீட்டின் அருகே உள்ள புளிய மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் வைப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வீரபாபு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வைப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.