கொத்தனார் சாவில் மர்மம்; உடலை வாங்க மறுத்ததால் பரபரப்பு

திருவெறும்பூர் அருகே கொத்தனார் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-08-04 19:30 GMT

திருவெறும்பூர் அருகே கொத்தனார் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கொத்தனார்

திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு பர்மா காலனியை சேர்ந்தவர் விஜேந்திரன் (வயது 40). கொத்தனாரான இவர்

மேலும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். இதனால் இவருக்கும், அவரது மனைவி வெள்ளையம்மாள் என்பவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனையடுத்து வெள்ளையம்மாள் விஜேந்திரனிடம் உன்னை பற்றி திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்போவதாக தெரிவித்தார். இதனால் மனம் உடைந்த விஜேந்திரன் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த நவல்பட்டு போலீசார் விஜேந்திரனின் உடலை கைப்பற்றி துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்

உடலை வாங்க மறுப்பு

இந்நிலையில் நேற்று விஜேந்திரனின் தந்தை சேகர், சகோதரர் சுதாகர் (50) ஆகியோர் விஜேந்திரனின் மரணத்தில் சந்தேகம் உள்ளது. அவரது மனைவி ெவள்ளையம்மாள் அவரை அடித்ததால்தான் இறந்துள்ளார். எனவே உடலை வாங்கமாட்டோம் என்று கூறி துவாக்குடி அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த திருவெறும்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவழகன், நவல்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

மேலும் விேஜந்திரனின் உடலில் எந்த காயமும் இல்லை. அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். அதன்பின் அவர்கள் உடலை வாங்கி சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்