மின்சாரம் பாய்ந்து கொத்தனார் பலி

மின்சாரம் பாய்ந்து கொத்தனார் உயிரிழந்தார்.

Update: 2023-04-06 21:46 GMT

திருவெறும்பூர்:

கொத்தனார்

திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் ரஞ்சித்குமார்(வயது 32). இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூர் நேரு நகர் பகுதியை சேர்ந்த முரளிதரன் என்பவரது வீட்டில் ரஞ்சித்குமார் வேலை பார்த்தார்.

அப்போது சுவிட்ச் போர்டில் ரஞ்சித்குமாரின் கை பட்டதாகவும், இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்ததாகவும் கூறப்படுகிறது. அவருடன் வேலை பார்த்தவர்கள், அதைக்கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாக ரஞ்சித்குமாரை மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

சாவு

அங்கு ரஞ்சித்குமாரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்