கொத்தனார் பலி
நன்னிலம் அருகே சரக்கு ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் மாதியதில் கொத்தனார் உயிரிழந்தார்.
நன்னிலம்;
நன்னிலம் அருகே வீதிவிடங்கன் பால்பண்ணசேரி பகுதியை சேர்ந்தவர் கலைமணி (வயது28). கொத்தனாரான இவர் அதே பகுதியை சேர்ந்த நண்பர் அலெக்சாண்டருடன் மோட்டார் சைக்கிளில் பத்தினியாபுரத்திலிருந்து வீதி விடங்கன் நோக்கி சென்றார். மோட்டார் சைக்கிளை கலைமணி ஒட்டினார். அலெக்சாண்டர் பின்புறம் அமர்ந்திருந்தார். வாழக்கொல்லை என்ற இடத்தில் சென்ற போது எதிரே நின்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி மோதியது. இதில் படுகாயம் அடைந்த கலைமணி மற்றும் அலெக்சாண்டர் இருவரும் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி கலைமணி இறந்தார்.
இது குறித்து நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.