மாசித் திருவிழா முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி
நத்தம் மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவையொட்டி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.
நத்தம் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்திபெற்ற கோவிலாகும். இக்கோவிலில் மாசித் திருவிழா வருகிற 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று காலையில் நடந்தது. இதில் முகூர்த்தக்கால் கம்பத்திற்கு பூ மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் முகூர்த்தக்கால் நடப்பட்டது. தொடர்ந்து மூலவர் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.