வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாசி மக திருவிழா

திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாசி மக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Update: 2023-02-25 18:45 GMT

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் கீழையூரில் புகழ்பெற்ற சிவானந்தவல்லி உடனுறை வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மக பெருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று முன் தினம் கணபதி பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து நேற்று கொடியேற்றமும் அதைத்தொடர்ந்து சந்திரசேகர் சாமிகள் ஆலய வலம் வருதல் மற்றும் பஞ்சமூர்த்திகள் சிறப்பு தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் திருக்கோவிலூர் நகராட்சி கவுன்சிலர்கள் சி.ஆர்.சம்பத், ஐ.ஆர்.கோவிந்தராஜன், தொழிலதிபர் டி.கே.டி.முரளி, காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.வி.முருகன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், திருக்கோவிலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து தினமும் சாமி வீதி உலா நடைபெறுகிறது. அடுத்த மாதம்(மார்ச்) 3-ந் தேதி மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், 4-ந் தேதி பாரிவேட்டை உற்சவம் நடக்கிறது. 5-ந் தேதி கட்டு தேர் ஆலய உள்பிரகாத்தை வலம் வருதல், 6-ந் தேதி மாசி மக தீர்த்தவாரி, 7-ந் தேதி அம்மனுக்கு அபிஷேகம், 8-ந் தேதி மகா சண்டிகேஸ்வரருக்கு மகா அபிஷேகம், 9-ந் தேதி விடையாற்றி உற்சவம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறையினர், கோவில் நிர்வாகிகள், விழா குழுவினர், உபயதாரர்கள் மற்றும் பக்தர்கள் முன்னின்று செய்து வருகின்றனர்.



Tags:    

மேலும் செய்திகள்