மாசி திருவிழா பால்குட ஊர்வலம்
நாராயண சுவாமி கோவில் மாசி திருவிழா பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள ஆறுமுகம்பட்டி ஸ்ரீமன் நாராயண சுவாமி கோவிலில் மாசி பெருந்திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்களில் தினமும் பணிவிடை, சிறப்பு பூஜைகள், இரவு அன்னதர்மம் ஆகியன நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் சுவாமி வீதி உலா, இன்னிசை கச்சேரி நடைபெற்றது.
நேற்று மதியம் பாபநாசத்தில் இருந்து கோவிலுக்கு பால்குடம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. மாலையில் வெற்றி விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் உகப்படிப்பு, இரவு அன்னதர்மத்தை தொடர்ந்து இந்திர வாகனத்தில் அய்யா எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவில் திரளான அன்புக்கொடி மக்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை தலைவர் தர்மராஜ் தலைமையில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.