மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தென்காசியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update:2023-06-14 00:15 IST

தென்காசியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தென்காசி மாவட்ட குழு சார்பில் புதிய பஸ்நிலையம் அருகில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இரவும் பகலும் நூற்றுக்கணக்கான வாகனங்களில் கனிம வளங்கள் புளியரை சோதனை சாவடி வழியாக கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மத்திய குழு உறுப்பினர் சண்முகம், தென்காசி மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கணபதி, வேலுமயில், குணசீலன், உச்சிமாகாளி, அயூப் கான், அசோக்ராஜ், தங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்