மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்

திருநாவலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-05-31 19:44 GMT

உளுந்தூர்பேட்டை, 

உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் எதிரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இருந்தை ஊராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை சரிவர செய்யாத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய குழு நிர்வாகி சுப்பிரமணி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ஆரோக்கியதாஸ், வீரமணி, செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் மோகன், மாவட்ட குழு அய்யனார் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் குணசேகர், சுரேஷ், ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்