மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சீர்காழியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி போலீஸ் நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். கொள்ளிடம் ஒன்றியம் புளியாந்துரை ஊராட்சி மன்ற தலைவர் நேதாஜி மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும். கடந்த வாரம் மக்களுக்கு போராடிய ஊராட்சி மன்ற தலைவர் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.