மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

டெல்லியில் போராடும் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-05-19 20:23 GMT

திருக்காட்டுப்பள்ளி:

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக பூதலூர் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் பூதலூர் நான்கு சாலை சந்திப்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு பூதலூர் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் பாஸ்கர் தலைமை தாங்கினர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கண்ணன், தமிழ்ச்செல்வி, சி.ஐ.டி.யூ. நிர்வாகி பேர்நீதிஆழ்வார், ஒன்றியக்குழு நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்