மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

குடிநீர் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Update: 2023-05-13 18:45 GMT

பண்ருட்டி

பண்ருட்டி நகராட்சிக்குட்பட்ட 10-வது வார்டு பக்கிரிப்பாளையம், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் கடந்த சுமார் 20 நாட்களாக மின் மோட்டார் பழுதாகி உள்ளதால் குடிநீர் இல்லாமல் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இது சம்பந்தமாக நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் இது வரையில் மின் மோட்டாரில் உள்ள பழுதை சரிசெய்யவில்லை.

இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் உத்தராபதி தலைமையில் பொதுமக்கள் காலிகுடங்களுடன் ஒன்று திரண்டு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பஸ் நிறுத்தம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பழுதடைந்த மின் மோட்டாரை சரிசெய்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க கோரி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நகர குழு உறுப்பினர்கள் தினேஷ், மகாலட்சுமி, கிளை செயலாளர் வசந்த், மாதர் சங்க நகர செயலாளர் அமலா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்