மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சங்கரன்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் பழைய பஸ் நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில், வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாலுகா செயலாளர் அசோக்ராஜ் தலைமை தாங்கினார். தென்காசி மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தின்போது தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உச்சிமாகாளி, குமார் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.