மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

முத்தையாபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-03-14 18:45 GMT

ஸ்பிக்நகர்:

முத்தையாபுரம் தோப்பு பஜாரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு புறநகர் செயலாளர் பா.ராஜா தலைமை தாங்கினார். இதை மாநிலகுழு உறுப்பினர் பூமயில் தொடங்கி வைத்து பேசினார். புறநகர்குழு உறுப்பினர் பூராடன் கண்டன உரையாற்றினார். திரிபுரா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மீது பா.ஜனதா கட்சியினர் தாக்குதல் நடத்தியதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பேச்சுமுத்து, புறநகர் குழு உறுப்பினர்கள் வெள்ளைச்சாமி, முனியசாமி, வாலிபர் சங்க புறநகர் தலைவர் ஜான்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்