மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்

கோத்தகிரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம் நடத்்தினர்.

Update: 2023-02-28 18:45 GMT

கோத்தகிரி

கோத்தகிரி மார்க்கெட் திடலில் மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மணிகண்டன் தலைமை தாங்கினார். ஆர்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் பட்ஜெட் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்றதாக இல்லை என்றும், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்தும் கண்டன கோஷம் எழுப்பினர். மக்கள் அதிகாரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ் கண்டன உரை நிகழ்த்தினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் செல்வம், மகேஷ், யோகராஜ் மற்றும் மக்கள் அமைப்பு சேர்ந்தவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்