மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தமிழக கவர்னரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-01-12 18:45 GMT

திருக்கடையூர்:

தமிழ்நாடு கவர்னரை கண்டித்து ஆக்கூர் கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் மார்க்ஸ் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் சீனிவாசன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கலந்துகொண்டு தமிழக கவர்னரை கண்டித்தும், அவரை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்