மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கன்னியாபுரம் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில், கோபால்பட்டி பஸ் நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் கோபால்பட்டி கிளை செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இந்திராநகர் கிளை செயலாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார்.
கோபால்பட்டி அருகே கன்னியாபுரத்தில் அமைக்கப்படுகிற புதிய சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும். கோபால்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தாலுகா மருத்துவமனையாக மாற்ற வேண்டும். கோபால்பட்டியில் மகளிர் கழிப்பறைகளை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் அக்கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் பாண்டி, நிர்வாகிகள் பிரபாகரன், பெருமாள், வெள்ளைக்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.