மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Update: 2022-07-29 18:00 GMT

விழுப்புரம்

விழுப்புரம் ரெயில் நிலையம் முன்பு நேற்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரிசி, கோதுமை, பருப்பு, மாவு வகைகள், சமையல் எண்ணெய், வெல்லம், தயிர், மோர் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்கள் அனைத்தின் மீதும் 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதித்து விலைவாசி உயர்வுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்தும், இந்த விலைவாசி உயர்வில் இருந்து ஏழை, எளிய, நடுத்தர குடும்பங்களை பாதுகாக்க வலியுறுத்தியும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் கலந்துகொண்டு மோடி அரசின் மக்கள் விரோத கொள்கை, கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பல லட்சம் கோடி வரிச்சலுகை, வாராக்கடன் தள்ளுபடி செய்து ஏழை, எளிய மக்களுக்கு விரோதமாக செயல்படும் பா.ஜ.க. மோடி அரசை கண்டித்து பேசினார்.

இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் குமார், ராதாகிருஷ்ணன், கீதா, முத்துக்குமரன், சங்கரன், மூர்த்தி, ராஜேந்திரன், வேல்மாறன், அறிவழகன், முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்