மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
ஆவுடையார்கோவில் கடை வீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கிளை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கிளை செயலாளர் பிரபு தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், வேட்டனூர் ஊராட்சியில் வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாகவும், பிரதம மந்திரி இலவச வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாகவும், ஆலடிக்காடு பங்கையேற்றான்குடி சாலையை சீரமைக்கக்கோரியும் கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் கவிவர்மன், ஒன்றிய செயலாளர் நெருப்பு முருகேஷ், தாலுகா குழுவை சேர்ந்த எம்.எஸ்.கலந்தர், கூத்தப்பெருமாள், வீரையா, கருணாநிதி மற்றும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.