மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
வந்தவாசியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வந்தவாசி
வந்தவாசியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டச் செயலாளர் அப்துல் காதர் தலைமை தாங்கினார்.
முன்னதாக வந்தவாசி பழைய பஸ் நிலையத்தில் ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலம் வந்தவாசி பஜார் வழியாக சென்று வந்தவாசி தேரடி நிலையத்தில் முடிந்தது. பின்னர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மலைவாழ் மக்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் ரா.சரவணன் கண்டன உரை ஆற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் இடைக்குழு உறுப்பினர்கள் யாசர் அராபத், மோகன், நகர செயலாளர் ராதாகிருஷ்ணன், நிர்வாகிகள் அரிதாசு, ராமகிருஷ்ணன் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாவட்ட பொருளாளர் சுகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் ரா.சேட்டு நன்றி கூறினார்.