மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
வேடசந்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
வேடசந்தூர் வட்டார மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் வேடசந்தூர் எம்.ஜி.ஆர்.நகர் பகுதி பொதுமக்கள் நேற்று வேடசந்தூர் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். அப்போது அவர்கள், வேடசந்தூர் எம்.ஜி.ஆர்.நகரில் வசிக்கும் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் பெரியசாமி தலைமை தாங்கினார். இதில், மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துச்சாமி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.