மேலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து மேலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம் நடந்தது.
மேலூர்,
மணிப்பூரில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் மற்றும் கலவரத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மதுரை புறநகர் மாவட்டம் மேலூர் தாலுகா குழு சார்பில் மேலூர் பஸ் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மேலூர் தாலுகா குழு உறுப்பினர் எஸ்.பி.மணவாளன் தலைமை தாங்கினார். மேலூர் தாலுகா செயலாளர் எம்.கண்ணன் தொடங்கி வைத்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்.சி.சபை அருட்தந்தை அந்தோணி பாக்கியம், கட்சியின் தாலுகா குழு உறுப்பினர் பி.எஸ்.ராஜாமணி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் வக்கீல் என்.பழனிச்சாமி, ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாலா, தாலுகா குழு உறுப்பினர்கள் எஸ்.ஆனந்த், தனசேகரன், முத்துலெட்சுமி, சி.எஸ்.மணி உள்பட பெண்கள் என பலர் கலந்து கொண்டனர்.