மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

சிவகிரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-01-22 18:45 GMT

சிவகிரி:

சிவகிரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிவகிரி அருகே மூடப்பட்ட சர்க்கரை ஆலையையும், தஞ்சாவூர் பகுதியில் மூடப்பட்ட சர்க்கரை ஆலையையும் உடனே திறக்க வேண்டும், விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவை தொகையை வழங்க அரசு ஏற்பாடு செய்து தர வேண்டும் என வலியுறுத்தி பஸ்நிலையம் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் சிவசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். நெல்லை மாவட்டக்குழு உறுப்பினர் சக்திவேலு, சிவகிரி நகர கிளைச்செயலாளர் ரவி, வாசுதேவநல்லூர் சுப்பையா, மாவட்ட தலைவர் நாகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்