மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-06-23 15:03 GMT

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி விரிவாக்க பணிகளை விரைவுபடுத்த கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். நகர் குழுவைச் சேர்ந்த சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர் முருகன், நகராட்சி கவுன்சிலர் ஜெயக்குமார், மாநிலக்குழு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியன், தேனிவசந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது அறிவிக்கப்பட்ட பல் மருத்துவக் கல்லூரியை உடனே தொடங்க வேண்டும், பாரா மருத்துவ கல்லூரிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தலைக்காய சிகிச்சை பிரிவு புற்றுநோய் சிகிச்சைப் பிரிவைத் தொடங்க வேண்டும், ஆய்வகங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்ப வேண்டும், கூடுதலாக எம்.ஆர்.ஐ. ஸ்கேன், சி.டி. ஸ்கேன் பிரிவு ஏற்படுத்தவும், தேவையான சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடவும் வலியுறுத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்