மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

சிவகாசி, அருப்புக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2022-06-21 15:25 GMT

அருப்புக்கோட்டை

சிவகாசி, அருப்புக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டம்

அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை சமீபத்தில் மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்தநிலையில் அருப்புக்கோட்டை அரசு மருத்துமனையில் போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் நியமிக்க வேண்டும், நோயாளிகளுக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை பற்றாக்குறை இல்லாமல் வழங்க வேண்டும், 24 மணி நேரமும் செயல்படக்கூடிய வகையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன், சி.டி. ஸ்கேன் வசதி ஏற்படுத்த வேண்டும், அதை இயக்குவதற்கு தேவையான ஊழியர்களையும் நியமிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அரசு மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும், நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் எனவும் வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் காத்தமுத்து தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர் தாமஸ், சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க பொறுப்பாளர் தமிழ்ச்செல்வராஜ் உள்பட கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டனர்.

சிவகாசி

சிவகாசி அரசு மருத்துவமனையில் சி.டி. ஸ்கேன் மற்றும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதி செய்து கொடுக்க கோரியும், மகப்பேறு பிரிவில் 100 படுக்கை வசதி கொண்ட கட்டிடம் தேவையான மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க கோரியும், மருந்து, மாத்திரைகளை கவரில் போட்டு கொடுக்க கோரியும், மருத்துவமனையில் சேதமடைந்த பகுதிகளை மராமத்து செய்யக்கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் அரசு ஆஸ்பத்திரி முன்பு நேற்று நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன், நகர் குழு உறுப்பினர்கள் பழனி, அன்னலட்சுமி, சண்முகராஜ், ஸ்டாலின், லெனின்குமார், காளீஸ்வரி, மாடசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்