மருது மக்கள் இயக்க தலைவர் கைது

மருது மக்கள் இயக்க தலைவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-03-26 19:28 GMT

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுவிக்கப்பட்ட முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 4 பேரையும் விடுவிக்க கோரி திருச்சியில் கடந்த 23-ந்தேதி நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தடையை மீறி கூட்டம் சேர்த்ததாகவும், பொது பாதையை அடைத்து மேடை அமைத்து திரண்டு இருந்ததாகவும் கூறி கண்டோன்மெண்ட் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சியின் திருச்சி நாடாளுமன்ற பொறுப்பாளர் பிரபு, சாட்டை துரைமுருகன், தலைமை பேச்சாளர் காளியம்மாள், இயக்குனர் களஞ்சியம், மருது மக்கள் இயக்க தலைவர் முத்துப்பாண்டி உள்பட 795 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர். இந்தநிலையில் கலகத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக மருது மக்கள் இயக்க தலைவர் முத்துப்பாண்டியை கண்டோன்மெண்ட் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்