சுதந்திர தினவி ழாவில்105வது பிறந்த நாள் கொண்டாடிய தியாகி
சுதந்திர தினவிழாவில் 105வது பிறந்த நாளை தியாகி ஒருவர் கொண்டாடினாா்.
நாடு முழுவதும் நேற்று சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன்படி கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின விழாவுக்கு கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பங்கேற்க தியாகிகளும் வந்திருந்தனர். விழாவில் கடலூர் மஞ்சக்குப்பம் பெண்ணையாறு ரோட்டை சேர்ந்த தியாகி ஏகாம்பரத்துக்கு நேற்று 105-வது பிறந்த நாளாகும். எனவே அவர் குடும்பத்துடன் விழா மேடைக்கு வரவழைக்கப்பட்டார். அங்கு கலெக்டர் அருண் தம்புராஜ் முன்னிலையில் தியாகி ஏகாம்பரம் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு பொதுமக்களும் வாழ்த்து தெரிவித்தனர்.