தீபாவளி பண்டிகையையொட்டி மஞ்சள் மார்க்கெட்டுகளுக்கு 5 நாட்கள் விடுமுறை

தீபாவளி பண்டிகையையொட்டி மஞ்சள் மார்க்கெட்டுகளுக்கு 5 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது.

Update: 2022-10-17 20:43 GMT

தீபாவளி பண்டிகையையொட்டி மஞ்சள் மார்க்கெட்டுகளுக்கு 5 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது.

மஞ்சள் ஏலம்

ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் அதிகமாக பயிரிடப்பட்டு வருகிறது. விவசாயிகள் அறுவடை செய்த மஞ்சளை விற்பனைக்காக பெருந்துறை அருகே கருமாண்டிசெல்லிபாளையத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடம், ஈரோடு செம்மாம்பாளையத்தில் உள்ள மஞ்சள் மார்க்கெட் மற்றும் ஈரோடு, கோபி ஆகிய வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்களுக்கு கொண்டு செல்கிறார்கள்.

அங்கு ஏலம் மூலம் மஞ்சள் விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகளும் ஏலத்தில் கலந்துகொண்டு மஞ்சளை வாங்கி செல்கிறார்கள்.

5 நாட்கள் விடுமுறை

இந்தநிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி மஞ்சள் மார்க்கெட்டுகளுக்கு வருகிற 22-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி கூறும்போது, 'தீபாவளி பண்டிகையையொட்டி வருகிற 24-ந் தேதி முதல் வருகிற 26-ந்தேதி வரை மஞ்சள் மார்க்கெட்டுகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. விடுமுறைக்கு முந்தைய சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை சேர்த்து தொடர்ந்து 5 நாட்கள் மஞ்சள் ஏலம் நடைபெறாது. 5 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் வருகிற 27-ந்தேதி முதல் மஞ்சள் மார்க்கெட் வழக்கம்போல் நடைபெறும்', என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்